Oru Kadhal Devadhai (From "Ithaya Thamarai")

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜை செய்ய
பிறந்தவன் நான் இல்லலையா
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா
தாமரைக்குள் வீடு கட்டி
தந்தவள் நானில்லையா

ஓடோடி வந்ததால் உள் மூச்சும் வாங்குது
உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது
ஒன்றானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யாருறவு யாரறிவாரோ
என் பெயரில் உன் பெயரை
இயற்கையும் எழுதியதோ

பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ
பூ மகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்

லலலலலலாலலல
லலலலலலாலலல லலலலலலாலலல



Credits
Writer(s): Str, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link