Rayile Rayile

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ
என் போல் தடம் புரள்வாய்

ஏ ரயிலே உன் போலே
என் உள் நெஞ்சில் ஓட்டம்
ஓடு பெண்ணோடு
நீ ரயில் தூது சொல்வாயா

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ
என் போல் தடம் புரள்வாய்

உலகெங்கும் நீ போகிறாய் வருகிறாய்
இவளை போல் பெண்ணை எங்கு நீ பார்க்கிறாய்
விரைவு ரயிலொன்று எதிரினில் வருகையில் உன்னோடு விபத்து
ஓ அழகுப்புயல் ஒன்று எதிரினில் இருக்கையில் என்னோடு விபத்து
ஏ ரயிலே உன் மேலே நான் தோள் சாயும் தோழன்
எனக்கு நீ எதற்கு போய் பெண் பார்த்து சொல்வாயா
ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ
என் போல் தடம் புரள்வாய்

நீயுந்தான் செல்வாய் மலைகளின் குகையிலே
நானுந்தான் செல்வேன் இமைகளின் குகையிலே
சிவப்பு நிறமது வழியினில் தெரிந்ததும் நிற்பாயே நீயும்
ஓ இவளின் இதழ் நிறம் பார்த்ததும் என் இதயம் நிற்காதா பாவம்

ஏ ரயிலே உன் உள்ளே இங்கே எல்லோரும் தூங்க
நான் மட்டும் தூங்காததேனென்று சொல்வாயா

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ
என் போல் தடம் புரள்வாய்

ஏ ரயிலே உன் போலே
என் உள் நெஞ்சில் ஓட்டம்
ஓடு பெண்ணோடு
நீ ரயில் தூது சொல்வாயா



Credits
Writer(s): Pa.vijay, Parasuram Radha
Lyrics powered by www.musixmatch.com

Link