Saayndhu Saayndhu

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச.
விரலோடு, விரல் பேச, அடடா வேறு என்ன பேச.
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே.
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே.

என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உன்னை கண்டு கொண்டேன்.
ஒ. என் தந்தை தோழன், ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்.
அழகான உன் கூந்தல் மாகோலம்.
அதை கேட்கும் எந்தன் வாசல்.
காலம் வந்து வந்து கோலமிடும்.
உன் கண்ணை பார்த்தாலே. முன் ஜென்மம் போவேனே.
அங்கே நீயும் நானும் நாம்.

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே

கை வீசி காற்றில், நீ பேசும் அழகில், மெய்யாகும் பொய்யும்.
என் மார்பில் வீசும், உன் கூந்தல் வாசம், ஏதோ செய்யும்.
என் வீட்டில் வரும் உன் பாதம். எந்நாளும் இது போதும்.
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்.
ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்,
அன்பால் உன்னை நானும் கொள்வேன்.

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச.
விரலோடு, விரல் பேச, அடடா வேறு என்ன பேச.
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே.
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே.

Credits
Writer(s): N Muthu Kumaran, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link