Kathaada Pokiraa

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தா தான் மனசு கெடும்
இவ பேர கேட்டா தான் மயக்கம் வரும்
காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தா தான் மனசு கெடும்
இவ பேர கேட்டா தான் மயக்கம் வரும்

கண் ஜாடை ஏதேதோ காட்டி வைப்பா
கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தா தான் மனசு கெடும்
இவ பேர கேட்டா தான் மயக்கம் வரும்

மீன் கூடை கையில தேன் கூடு நெஞ்சிலே
ரெண்டுக்கும் விலை இருக்கு
தேராட்டமா ராசாத்தி நடை இருக்கு
மீன் கூடை கையில தேன் கூடு நெஞ்சிலே
ரெண்டுக்கும் விலை இருக்கு
தேராட்டமா ராசாத்தி நடை இருக்கு
சிறுகால் நண்டாட்டம்
இவ மனசில என்னடி கொண்டாட்டம்

செண்டு மேலாட கொண்டை கீழாட
ஆடி அசஞ்சி வாராளே
இவ சிலுக்கு சித்தாட அழைக்கும் மச்சான
சிரிப்பா விரிப்பா சிலந்தி வலைய

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தா தான் மனசு கெடும்
இவ பேர கேட்டா தான் மயக்கம் வரும்

மங்கம்மா ராணியாம் தங்கந்தான் மேனியாம்
வந்தாளாம் பொழுதோடு
சந்தையில வித்தாளாம் கருவாடு
மங்கம்மா ராணியாம் தங்கந்தான் மேனியாம்
வந்தாளாம் பொழுதோடு
சந்தையில வித்தாளாம் கருவாடு

வாள மீன் உண்டு கையளவுல வஞ்சர மீன் உண்டு
கெண்டை மீன் உண்டு கெளுத்தி மீன் உண்டு
அள்ளி கொடுப்பா ஏராளம்
இவ கடலிலும் போகாம வலையும் போடாம
கரை மேல் இருந்தே சரியா புடிப்பா

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தா தான் மனசு கெடும்
இவ பேர கேட்டா தான் மயக்கம் வரும்

கண் ஜாடை ஏதேதோ காட்டி வைப்பா
கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா

ஹய்யோ-காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தா தான் மனசு கெடும்
இவ பேர கேட்டா தான் மயக்கம் வரும்



Credits
Writer(s): Gangai Amaren, Pulamaipithaan
Lyrics powered by www.musixmatch.com

Link