Kutthadi Kutthadi

ஆ-சௌ, ஆ-சௌ, ஆ-சௌ, ஆ-சௌ

குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா வஞ்சி உடம்பு வாட்டமெடுக்குதா

குத்தலரிசி குத்திவிடம்மா பச்சை அரிசி அள்ளி எடம்மா
நிமிந்து நின்னு உழைக்கணும் நல்லபடியா பொழைக்கணும்

அதிகாரம் திமிரிருந்தா அதனாலே லாபமில்லே
வளையாத உடம்பிருந்தா ஒடிஞ்சாலும் பாபமில்லே
சுயமா ஒரு வேலைய பாரு தொழிலாளிக மதிப்பத பாரு
புத்திய வெச்சும் பொழைக்கணும்
கத்திய வைச்சும் பொழைக்கணும்
நித்தம் நிதமும் உழைப்ப தானே நீ மதிக்கணும்

குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா வஞ்சி உடம்பு வாட்டமெடுக்குதா

ஏ-ய்-ஏய்-ஏய்

துணிஞ்சாக்கா உலகத்திலே நடக்காதது ஒன்னுமில்லே
பணப்போதை மயக்கத்திலே இருந்தாக்கா கண்ணுமில்லே
பல ஏழைங்க உழைப்புல தானே
பண முதலைங்க பாடிகிட்டிருக்கு
பட்டு துணிக சிரிக்குது கந்த துணிக அழுகுது
எட்டி உதைச்சா உலகத்துல எல்லாம் மாறுது

குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா வஞ்சி உடம்பு வாட்டமெடுக்குதா

பொறுப்பாக மதிச்சு நட புடிக்காட்டி ஒதுங்கி கிட
பொண்ணாக நினைச்சு நட புரிஞ்சாக்கா எதுக்கு தடை
அளவோட இருக்கணும் எதிலும்
அன்போட கொடுக்கணும் பதிலும்
சொந்த ஜனத்தை மதிக்கணும் தூக்கி எறிஞ்சா மிதிக்கணும்
சொல்லி கொடுத்தா புரிஞ்சிகிட்டு நீ நடக்கணும்

குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா வஞ்சி உடம்பு வாட்டமெடுக்குதா

குத்தலரிசி குத்திவிடம்மா பச்சை அரிசி அள்ளி எடம்மா
நிமிந்து நின்னு உழைக்கணும் நல்லபடியா பொழைக்கணும்

குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா வஞ்சி உடம்பு வாட்டமெடுக்குதா
குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா வஞ்சி உடம்பு வாட்டமெடுக்குதா

வஞ்சி உடம்பு வாட்டமெடுக்குதா
வஞ்சி உடம்பு வாட்டமெடுக்குதா

Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link