Azhagiya Kanne

அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே

சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல
என் வீட்டில் என்றும் சந்த்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா

அழகிய கண்ணே உறவுகள் நீயே

சொர்க்கம் எப்போதும் நம் கைய்யிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கைய்யிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்

அழகிய கண்ணே உறவுகள் நீயே

மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது

அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே



Credits
Writer(s): Ilaiyaraaja, Kannadasan
Lyrics powered by www.musixmatch.com

Link