Enakenna Yerkanavey

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே ஆஆஆ
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே
உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு

பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது ஆ
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது
அது காலத்தை கட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று

உன் உயிர் நிறைகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி

மார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே மனசை மறைக்கதே
என் வயதை வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்த பேசுமடி

என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி
வார்த்தை என்னை கைவிடும் போது மௌனம் பேசுகிறேன்
என் கண்ணீர் வீசுகிறேன்
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே ஆஆஆ
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே



Credits
Writer(s): Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link