Kadhal… Kadhal (From "Kalvan")

காதல்... காதல்

காதல்... காதல்
காதல் யார் தந்ததோ?

மேகங்கள் சொல்லாமல், மின்னல்கள் இல்லாமல், என் காட்டில் மழைப் பெய்ததோ?
இள ரத்தம் சூடேற, என் ஜென்மம் ஈடேர, என் காதல் உண்டானதோ?
காதல்... காதல்

காதல் என்ற பாஷைக்கு வார்த்தை ஏதும் கிடையாதா?
காதல் என்ற பள்ளியில் மௌனம் கூட பேசாதா?
ஜீவ வாசல் மெல்லமெல்ல திறந்துக் கொண்டதோ?
தீண்டினால் பசியாருவேன், தூண்டினால் பரிமாறுவேன்
எங்கு தொடுவதோ? அங்கு தொடர்வதோ?
என்ன விடுவது, என்ன அடைவது பெண்ணே?
பேதைப் பெண்ணே, நீ சொல்லடி

காதல்... காதல்

பெண்ணின் தேவை என்னவோ சொல்லிச்சொல்லி தந்தாயே
ஆணின் தேவை என்னவோ அள்ளிஅள்ளித் தந்தாயே
புனிதப் பெண்மை என்னவென்று புரிந்துபோனதே
காற்றினால் உயிர் வாழ்ந்தவன், காதலால் உயிர் வாழ்கிறேன்
வானம் புதியது, பூமி புதியது, காலம் புதியது, காற்றுச் சொல்லியது
காதல் செய்யும் மாயம் யார் செய்வது?

காதல்... காதல்
காதல் யார் தந்ததோ?
மேகங்கள் சொல்லாமல், மின்னல்கள் இல்லாமல், என் காட்டில் மழை பெய்ததோ?
இள ரத்தம் சூடேற, என் ஜென்மம் ஈடேர, என் காதல் உண்டானதோ?
காதல்... காதல்



Credits
Writer(s): Kannadhasan, M. S. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link