Paadi Parantha Kili

பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே

பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
கேட்காத மீட்டெடுத்து வாறேன் நானே

பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே

Music-1

ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகயில காலு ரெண்டும் ஊனமடி
ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகயில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது கான்னாதாச்சு
கண்ணுமுழிச்சா அது வாராது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
வீணாச தந்தவரு யாரு யாரு

பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே

Music-2

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சொலயோன்னு செல்லரிச்சி போனதடி
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சொலயோன்னு செல்லரிச்சி போனதடி
கல்லிலடிச்சா அது காயம் ஆறும்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
கேட்காத மீட்டெடுத்து வாறேன் நானே
பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே
End



Credits
Writer(s): Ilaiyaraaja, R. V. Udhavakumar
Lyrics powered by www.musixmatch.com

Link