Athiripacha

அத்திரிபாச்சா கத்திரிக்கோலு
சின்ன ராமசாமி
அப்பழுக்கில்லா உத்தம ராசா
பெரிய ராமசாமி
அத்திரிபாச்சா கத்திரிக்கோலு
சின்ன ராமசாமி
அப்பழுக்கில்லா உத்தம ராசா
பெரிய ராமசாமி

குணத்தாலே தர்மன் தானே
படிக்காத அண்ணன் தான்
அல்டாப்சு அலட்டல்காரன்
அழகாக கம்பி நீட்டும் தம்பி

அத்திரிபாச்சா கத்திரிக்கோலு
சின்ன ராமசாமி
அப்பழுக்கில்லா உத்தம ராசா
பெரிய ராமசாமி
அத்திரிபாச்சா கத்திரிக்கோலு
சின்ன ராமசாமி
அப்பழுக்கில்லா உத்தம ராசா
பெரிய ராமசாமி

ராத்திரியானா தூக்கம்
போட மாட்டான்
படுத்தா விடிஞ்சாலும்
எந்திரிக்க மாட்டான்
சின்ன ராமசாமி
ஈயெறும்புக்கும் தீங்கு
செய்ய மாட்டான்
தம்பி தப்பு செய்ஞ்சாலும்
குத்தம் சொல்ல மாட்டான்
பெரிய ராமசாமி
அண்ணணோட வாக்கில்
உண்மை வந்து செதறும்
தம்பி வாயத் தொறந்தா
தினம் வம்பு வந்து உதறும்
அடிதடிகளை அண்ணன் கண்டா
ஒதுங்கிடுவான் தன்னாலே
புது விடலைய தம்பி கண்டா
படம் புடிப்பான் கண்ணாலே

அட ஆந்திரம் கேரளம் கர்நாடகத்திலும்
அண்ணன் தம்பி தங்க கம்பி எங்கும்
இவரைப் போல இல்லே

அத்திரிபாச்சா கத்திரிக்கோலு
சின்ன ராமசாமி
அப்பழுக்கில்லா உத்தம ராசா
பெரிய ராமசாமி
அத்திரிபாச்சா கத்திரிக்கோலு
சின்ன ராமசாமி
அப்பழுக்கில்லா உத்தம ராசா
பெரிய ராமசாமி

குணத்தாலே தர்மன் தானே
படிக்காத அண்ணன் தான்
அல்டாப்சு அலட்டல்காரன்
அழகாக கம்பி நீட்டும் தம்பி

அத்திரிபாச்சா கத்திரிக்கோலு
சின்ன ராமசாமி
அப்பழுக்கில்லா உத்தம ராசா
பெரிய ராமசாமி
அத்திரிபாச்சா கத்திரிக்கோலு
சின்ராம்சாமி
அப்பழுக்கில்லா உத்தம ராசா
பெரிய ராம்சாமி

பத்தரை மாத்து தங்கம் போல இருப்பான்
பச்சைப் புள்ளை பசியாற
பாலை கறந்து கொடுப்பான்
பெரிய ராமசாமி
பித்தளையக் கூட rolled-gold போல
மாத்தும் பித்தலாட்டத்தில்
ஊரை வாட்டி வளைப்பான்
சின்ன ராமசாமி

தம்பிக்காக அண்ணன்
கோயில் சுத்தி நடப்பான்
கோயில் ஓரம் தம்பி
காதல் வலைய விரிப்பான்
படிச்சவங்களை கண்டா போதும்
கும்பிடுவான் அண்ணன் தான்
படிக்கிற சிறு பசங்களை கண்டா
குழப்பிடுவான் தம்பி தான்

அட ஆந்திரம் கேரளம் கர்நாடகத்திலும்
அண்ணன் தம்பி தங்க கம்பி எங்கும்
இவரைப் போல இல்லே

அத்திரிபாச்சா கத்திரிக்கோலு
சின்ன ராமசாமி
அப்பழுக்கில்லா உத்தம ராசா
பெரிய ராமசாமி
அத்திரிபாச்சா கத்திரிக்கோலு
சின்ராம்சாமி
சின்ராம்சாமி
அப்பழுக்கில்லா உத்தம ராசா
பெரிய ராம்சாமி
பெரிய ராம்சாமி

குணத்தாலே தர்மன் தானே
படிக்காத அண்ணன் தான்
அல்டாப்சு அலட்டல்காரன்
அழகாக கம்பி நீட்டும் தம்பி

அத்திரிபாச்சா கத்திரிக்கோலு
சின்ராமசாமி
சின்ராம்சாமி
அப்பழுக்கில்லா உத்தம ராசா
பெரிய ராம்சாமி
பெரிய ராம்சாமி
அத்திரிபாச்சா கத்திரிக்கோலு
சின்ராம்சாமி
சின்ராம்சாமி
அப்பழுக்கில்லா உத்தம ராசா
பெரிய ராம்சாமி
பெரிய ராம்சாமி



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link