Ilavenirkala

இளவேனிற்கால பஞ்சமி
அவள் வானில் வந்த பௌர்னமி
இளவேனிற்கால பஞ்சமி
அவள் வானில் வந்த பௌர்னமி
சித்திரை வானம் சித்திரம் தீட்டிடும் மேகம்
ஒரு பத்தரைமாத்து தங்க நிலாவை சந்தித்தேன்
எங்கள் பார்வை நின்று போனது
வானம் பூமி என்ன ஆனது
இளவேனிற்கால பஞ்சமி
அவள் வானில் வந்த பௌர்னமி

தூக்கம் போனது அவளை நினைத்து ஏக்கமானது
பித்தனைப்போல் ஆனேன்
பார்க்கும் இடமெல்லாம் அவளைப்போலே
தாவித்தெறிந்தது பைத்தியமானேன்
என்னைப்போலே அவளும் இருந்தால் என்று
அவள் சொல்லக்கேட்டு உள்ளம் எங்கோ போனது
மீண்டும் மீண்டும் அவள் தான் வேண்டும் என்று
என்னைத்தூண்டும் உள்ளம் பச்சைக் கொடி காட்டுதே
இது இன்று வந்த சொந்தமா இல்லை
ஜென்ம ஜென்ம பந்தமா
இளவேனிற்கால பஞ்சமி
அவள் வானில் வந்த பௌர்னமி
சித்திரை வானம் சித்திரம் தீட்டிடும் மேகம்
ஒரு பத்தரைமாத்து தங்க நிலாவை சந்தித்தேன்
எங்கள் பார்வை நின்று போனது
வானம் பூமி என்ன ஆனது
இளவேனிற்கால பஞ்சமி
அவள் வானில் வந்த பௌர்னமி

மஞ்சள் குங்கும் கொண்ட தேவதை
எந்தன் கையிலே மங்கள நாண் கொண்டால்
திங்கள் ஆடிடும் வானம் போலவே
எங்கள் வீட்டிலே மலரடி தாழ் தந்தால்
பாடவைத்து உள்ளம் ஆடவைத்து
அன்பு பாட்டுச்சொல்லி வீட்டில் இன்பம் தந்தவள்
தேடவைத்து நெஞ்சம் வாடவைத்து என்னை
சோகத்தீயில் வேகவைத்துப் போனவள்
இந்த ஏழை என்னை மனதால்
ஜீவனுக்குள் கலந்தாள்

இளவேனிற்கால பஞ்சமி
அவள் வானில் வந்த பௌர்னமி
சித்திரை வானம் சித்திரம் தீட்டிடும் மேகம்
ஒரு பத்தரைமாத்து தங்க நிலாவை சந்தித்தேன்
எங்கள் பார்வை நின்று போனது
வானம் பூமி என்ன ஆனது
இளவேனிற்கால பஞ்சமி
அவள் வானில் வந்த பௌர்னமி



Credits
Writer(s): Arivumathi
Lyrics powered by www.musixmatch.com

Link