Oru Jeevanthan (Male Version)

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமால் இசைகின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருகின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாளும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமால் இசைகின்றது
கீழ்வர்க்கம் மேல்வர்க்கம்
இணையாத இருகோடுகள் ஹா ஹா ஹா ஹா
சேர்ந்தாலும் ஹா சில நாளில்
கரைகின்ற மணல் வீடுகள்

கட்டில் சொந்தம் என்னை கை விட்டது
தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்றது
உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்
யாருமில்லை எனக்காகத்தான்
மலரே மலரே மடியில் தவழும் நிலவே

ஹா உங்கம்மா
என்ன விலை கொடுத்து வாங்க நினைச்சா
நான் யாருக்கும் அடிமை இல்லை
It's impossible i say ஹாஹாஹா

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமால் இசைகின்றது
தெய்வங்கள் சில நேரம்
தவறாக நினைக்கின்றது ஹா ஹஹஹா
பொருந்தாத இரு நெஞ்சை
மணவாழ்வில் இணைக்கின்றது

கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்
உன் வாழ்விலே அது வியாபாரம்தான்
மணிமாளிகை உன் வீடுதான்
மாஞ்சோலையில் என் கூடுதான்
மதுதான் மனைவி
இனி என் வாழ்க்கை துணைவி

நான் குடிப்பேன்
கேட்கறதுக்கு பொண்டாட்டியா இருக்கா
ஹஹஹஹா
குடிச்சிட்டே இருப்பேன்
என்ன கேட்கறதுக்கு யார் இருக்கா ஹா
ஹஹஹஹா

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமால் இசைகின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருகின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாளும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

Credits
Writer(s): Vaalee, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link