Naan Kaanum (From "Kaasi")

ஓ ஓ - ஓஹோ ஹோ ஓ - ஓ ஓ - ஓஹோ ஹோ ஓ - ஓ
ஓஓ - ஓஒ - ஓஒ - ஆஅ - ஆ - அ - ஆ

நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்?
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்?
சொல்வது யார் சொல்?
வெண் பனித்துளியே
மெல்லென பேர் சொல்
பசும் புல்வெளியே

என்னை காணும் அன்னை பூமி
உன்னை காணவே இங்கே
வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம்
வானம்பாடி போல் பாடும்
வாழ்க்கை என்றுமே வேண்டும்
நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்?

பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை அதன் புன்னகை மணம் அறிவேன்
கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை கை தொட்டதன் உணர்வறிவேன்
குக்குக்குக் கூவென கூவும் குயில்களின் கூட்டத்தில் நான் இணைவேன்
கட்டுக்கடங்கா நினைவில் கற்பனை றெக்கை விரித்திடுவேன்

உங்கள் முகம் பார்த்ததில்லை வருந்தவில்லை நான்
என் முகத்தை நீங்கள் எல்லாம் பார்ப்பதினால்தான்
உங்கள் மேடை பாடகன் நான்
ஓஒ - ஓ - ஓஒ

நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்?
நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்?

ராத்திரி பேச்சினில் அம்மா கதைகளில் பூத்தது பல நினைவு
கேட்டிடும் கதைகளில் கலந்தே உலவிட சுற்றி வரும் கனவு
கற்றவர் பேசிட காதில் கேட்டதில் பெற்றதெல்லாம் வரவு
வாட்டிய வறுமையில் எனக்குள் திறந்தது கற்பனையின் கதவு

வாழ்வினை நான் கண்டுக்கொண்டேன் தேடலில்தானே
வாழ்க்கை படும் பாட்டினிலே பாடகன் ஆனேன்
பாட்டில் வாழும் பூங்குயில் நான்
ஓஒ - ஓ - ஓஒ

நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்?
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்?

சொல்வது யார் சொல்?
வெண் பனித்துளியே
மெல்லென பேர் சொல்
பசும் புல்வெளியே

என்னை காணும் அன்னை பூமி
உன்னை காணவே இங்கே
வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம்
வானம்பாடி போல் பாடும்
வாழ்க்கை என்றுமே வேண்டும்
நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்?



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link