Akilandeswari

அகிலாண்டேஷ்வரி அம்பிகையே
திரு அமுதீசர் நாயகியே
அகிலாண்டேஷ்வரி அம்பிகையே
திரு அமுதீசர் நாயகியே

ஆனைகள் உலவிய சோலையிலே
திருக்கோவில் கொண்டாளே
திருக்கோவில் கொண்டாளே
அகிலாண்டேஷ்வரியே
அருள் தரும் அம்பிகையே

அகிலாண்டேஷ்வரி அம்பிகையே
திரு அமுதீசர் நாயகியே

அமுதலிங்கமென ஈசனைத் தேவி
அன்புடன் வழிபடும் கோவில்
அமுதலிங்கமென ஈசனைத் தேவி
அன்புடன் வழிபடும் கோவில்
ஆனையும் சிலந்தியும் ஈசனை வணங்க
அருளினை வழங்கிய கோவில்
அருளினை வழங்கிய கோவில்

அகிலாண்டேஷ்வரி அம்பிகையே
திரு அமுதீசர் நாயகியே

அண்டம் யாவையும் ஈன்ற அன்னைக்கு
அழகிய பைந்தமிழ் மாலை
அண்டம் யாவையும் ஈன்ற அன்னைக்கு
அழகிய பைந்தமிழ் மாலை
அடியவர் சூட்டிப் போற்றிய மாலை
அகிலாண்ட நாயகி மாலை
அகிலாண்ட நாயகி மாலை

அகிலாண்டேஸ்வரி அம்பிகையே
திரு அமுதீசர் நாயகியே

ஆனந்த வடிவுடை நாயகி திருமுகம்
கண்டதும் நல்லருள் கூடும்
ஆனந்த வடிவுடை நாயகி திருமுகம்
கண்டதும் நல்லருள் கூடும்
அன்னையின் திருவடி வழிபடுவோர்க்கு
ஆயிரம் நன்மைகள் கூடும்
ஆயிரம் நன்மைகள் கூடும்

அகிலாண்டேஸ்வரி அம்பிகையே
திரு அமுதீசர் நாயகியே
அகிலாண்டேஸ்வரி அம்பிகையே
திரு அமுதீசர் நாயகியே

ஆனைகள் உலவிய சோலையிலே
திருக்கோவில் கொண்டாளே
திருக்கோவில் கொண்டாளே
அகிலாண்டேஸ்வரியே
அருள் தரும் அம்பிகையே

அகிலாண்டேஸ்வரி அம்பிகையே
திரு அமுதீசர் நாயகியே



Credits
Writer(s): Manikkavinayagam
Lyrics powered by www.musixmatch.com

Link