Arjunar Villu (From "Gilli")

அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு பொய்க்காது
எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு
உனக்கொரு எல்லை கிடையாது

யாரோ யாரிவனோ?
ஒரு நீரோ தீயோ யார் அறிவார்
ஆளும் தேரிவனோ?
அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்

அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு

அஞ்சுவது மடம், தக்க தின தா
எஞ்சுவது திடம், தினாக்கு தா
அஞ்சு விரல் தொடுமே ஆகாயம்
வெட்டிவிடு வினை, தக்க தின தா
ஏத்தி விடு உனை, தினாக்கு தா
உன்னுடைய துணையே முந்தானை

இவன் ஒரு அதிசய புலி
இவன் இருவது நகம் அது உழி
அதை அறிந்திடும் பகைவனின் வழி, ஹோ ஹோ ஓ
தனி ஒரு மனிதனின் படை
அதில் எழுவது விடுதலை விடை
அது மழை வெயில் இரண்டுக்கும் குடை, ஹோ ஹோ ஓ

ஏறு முன்னேறு
இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு
ஒரு வெற்றி என்பது கண் கூடு

அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு

தேவதையின் ரகம், தக்க தின தா
வெண்ணிலவு முகம், தினாக்கு தா
மூடியது ஏனோ கார்மேகம்
தேடல் ஒரு கண்ணில், தக்க தின தா
ஊடல் ஒரு கண்ணில், தினாக்கு தா
நாளை இரு கண்கள் சுகமாகும்

அழகிய தாய் மொழி இவள்
இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்
அட இவளுக்கு இவளே நகல், ஹோ ஹோ ஓ
அழகிய மெழுகென உடல்
உன் விழியினில் எதற்கடி கடல்
அதை துடைப்பது இவனது விரல், ஹோ ஹோ ஓ

ஏறு முன்னேறு
இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு
ஒரு வெற்றி என்பது கண் கூடு

அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு



Credits
Writer(s): Kabilan, Vidya Sagar
Lyrics powered by www.musixmatch.com

Link