Yengae Sellum

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்

நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்
வழி போக துணையாய் அன்பே வாராயோ

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்

ஊரை விட்டு ஓ ஓர் குடிசை
அங்கே யார் சென்று போட்டு வைத்தார்
காதலிலே ஓர் பைத்தியமே
சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார்

காணும் கனவுகளில் இன்பம் இன்பம்
உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்
காதலென்றால் ஓ வேதனையா

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்

மண் கேட்டா அந்த மழை பொழியும்
மேகம் பொழியாமல் போவதுண்டா
கரை கேட்டா அந்த அலைகள் வரும்
அலைகள் தழுவாமல் போவதுண்டா

கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே
காதல் மழையை பொழி கண்ணே கண்ணே
என் உயிரே ஓ என் உயிரே

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்

நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்
வழி போக துணையாய் அன்பே வாராயோ

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்



Credits
Writer(s): Arivumathi, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link