Uyire En Uyire

உயிரே என் உயிரே
என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி
வாழ்வில் இனிக்குதடி
ஒ... ஒரு நிமிடம், ஒரு நிமிடம்
எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால்
தலைகால் புரியாதே

நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி
நீ என்னை பாரடி

இதுவரை எங்கிருந்தாய்
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்

உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா
இன்னும் என்னை புரியலையா

நான் சிரித்து மகிழ்ந்து
சிலிர்க்கும் வரத்தை நீ கொடுத்தாய்
நான் நினைத்து நினைத்து
ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய்

எங்கேயோ உன் முகம்
நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன்
நான் வாழ்ந்த ஞாபகம்

உயிரே என் உயிரே
என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி
வாழ்வில் இனிக்குதடி
ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம்

எனை நீ பிரியாதே
என் அருகில் நீ இருந்தால்
தலைகால் புரியாதே
நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி
நீ என்னை பாரடி

உன்னுடன் இருக்கையிலே
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா

உன்னுடன் நடக்கையிலே
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே

நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்
நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி
நீ என்னை பாரடி

உயிரே என் உயிரே
என்னவோ நடக்கிறதே
அடடா இந்த நொடி
வாழ்வில் இனிக்கிறதே
ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால்
தலைகால் புரியாதே
எங்கேயோ உன் முகம்
நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன்
நான் வாழ்ந்த ஞாபகம்
நான் வாழ்ந்த ஞாபகம்



Credits
Writer(s): Harris Jayaraj J, Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link