Kanmani Kathal Vazha

கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்!
கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்!!
இந்த மௌன நாடகம்
மெல்லக் கலைந்து போகவே
நிலவே
ஒரு தூதாக நீ சென்று வா!!!

கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்!!

(இசை)

மாடம் பொன்மாடம் என்றாலும்
மன்னன் இல்லாமல் நான் வாழ்வதா?
கண்ணில் உலாவும் நிலாவே
கையில் வராமல் நீ போவதா?
காதல் தோற்றால் கண்கள் தூங்குமா?
நேசம் பொய்த்தால் நெஞ்சம் தாங்குமா?
அலை பாயும் நெஞ்சம்... ஓ
இனி உந்தன் தஞ்சம்... ஓ...!!

கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்!!!

(இசை)

பூவே செம்பூவே உன் பேரை
தென்றல் சொல்லாத நாள் ஏதம்மா?

(இசை)

பொன்னே செம்பொன்னே உன் மாலை
தோள்கள் கொண்டாடும் நாள் கூடுமா?
ராஜ வம்சம் எனை ஏற்குமா?
ஏழை என்றே எனை பார்க்குமா?
அலை பாயும் நெஞ்சம்... ஓ
இனி உந்தன் தஞ்சம்... ஓ

கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்!
இந்த மௌன நாடகம்
மெல்லக் கலைந்து போகவே
நிலவே
ஒரு தூதாக நீ சென்று வா!!

கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்!!!



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link