Yele Yepulla

ஏலே ஏ புள்ள நெஞ்சுக்குள்ள
நெருஞ்சி முள்ள வச்சா கூட
உற்சாகமாக ஆடுரேனே
ஏலே ஏ புள்ள என்னா புள்ள செஞ்ச மெல்ல
பாதையில்லா தேசத்துள்ள ஓடுரேனே

ஒன்னும் புரியவில்ல
ஐயயோ இத நம்ப முடியவில்ல
கண்கள் இமைக்கவில்ல
எனக்கு இன்று கால்கள் தரையில் இல்ல

உன்னோடு பழகிடும் நேரம்
என் நெஞ்சின் பயம் எல்லாம் தீரும்
உன் பெயரை உச்சரிக்கும் நேரம்
உள்ளத்தில் வெள்ளம் ஒன்று பாயும்

ஏலே ஏ புள்ள நெஞ்சுக்குள்ள
நெருஞ்சி முள்ள வச்சா கூட
உற்சாகமாக ஆடுரேனே
ஏலே ஏ புள்ள என்னா புள்ள செஞ்ச மெல்ல
பாதையில்லா தேசத்துள்ள ஓடுரேனே

ஒன்னும் புரியவில்ல
ஐயயோ இத நம்ப முடியவில்ல
கண்கள் இமைக்கவில்ல
எனக்கு இன்று கால்கள் தரையில் இல்ல

எத பாத்தாலும்
உன்தன் ஞாபகம்தான் தோனுது தோனுது
எத செஞ்சாலும்
உனக்காக செய்ய தோனுது தோனுது

என் நிழலும் கூடதான்
உன் நிழல தேடுது தேடுது
நீ இல்லாத நேரம்தான்
உன்னை என்னி வாடுது வாடுது

உன்தன் வாசல் பார்க்கும் போது
என்தன் கால்கள் துள்ளும் துள்ளும்
மூடி வைத்த ஜன்னல் கண்டால்
என்தன் கண்கள் கோவம் கொல்லும்

நீ வேண்டும் நீ வேண்டும்
உன்னோடு நான் வேண்டும்
இதையே தான் தெய்வத்திடம்
வரம் வேண்டும்

நீ வேண்டும் நீ வேண்டும்
நீ பேசும் மொழி வேண்டும்
உன்னோடு ஜென்மம் வேண்டும் மீண்டும்

ஒன்னும் புரியவில்ல
ஐயயோ இத நம்ப முடியவில்ல
கண்கள் இமைக்கவில்ல
எனக்கு இன்று கால்கள் தரையில் இல்ல

செல்ல சண்டைகள் போடும் போது
நீ வென்றிட வேண்டும்
செல்லும் இடமெல்லாம்
நீயும் வர வேண்டும்
கோபிக்கும் நொடியில்
ஒரு பத்து முத்தம் தருவேன் ந்
முத்தத்திற்காக கோப பட வேண்டும்

நீ வேண்டும் நீ வேண்டும்
உன்னோடு நான் வேண்டும்
இதையே தான் தெய்வத்திடம்
வரம் வேண்டும்

நீ வேண்டும் நீ வேண்டும்
நீ பேசும் மொழி வேண்டும்
உன்னோடு ஜென்மம் வேண்டும் மீண்டும்

ஏலே ஏ புள்ள நெஞ்சுக்குள்ள
நெருஞ்சி முள்ள வச்சா கூட
உற்சாகமாக ஆடுரேனே
ஏலே ஏ புள்ள என்னா புள்ள செஞ்ச மெல்ல
பாதையில்லா தேசத்துள்ள ஓடுரேனே

ஒன்னும் புரியவில்ல
ஐயயோ இத நம்ப முடியவில்ல
கண்கள் இமைக்கவில்ல
எனக்கு இன்று கால்கள் தரையில் இல்ல

உன்னோடு பழகிடும் நேரம்
என் நெஞ்சின் பயம் எல்லாம் தீரும்
உன் பெயரை உச்சரிக்கும் நேரம்
உள்ளத்தில் வெள்ளம் ஒன்று பாயும்



Credits
Writer(s): Viveka, Manu Ramesan
Lyrics powered by www.musixmatch.com

Link