Mailanji

ஆண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பெண்: கண்ணாடி போல
காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம்
பாத்து நிக்குறேன்

ஆண்: கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க
காத்தாடியாக
நானும் சுத்துறேன்

பெண்: சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

குழு: பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
பெண்: ஹா... ஆஅ...
குழு: உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

பெண்: ஆ... மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
ஆண்: கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

ஆண்: ஹேய் எஹ் எஹ் எஹ்...

குழு: பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

பெண்: கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே... ஏ...

ஆண்: தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்தை போல
உசுரே ஊறுகின்றதே... ஏ...

பெண்: விளக்கும் கூட
வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ... ஓஒ... ஓஒ

ஆண்: கணக்கில்லாம
வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ... ஓ... ஓஒ...

பெண்: அழகே நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவலை
உன்ன நான் தாலாட்டவேனே மனகூட்டுல

ஆண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பெண்: பல்லாக்கு போல நீயும்
என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுறேன்

ஆண்: வெள்ளாட்டு மேல
பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்

பெண்: சதா சதா
சந்தோஷமாகுறேன்
ஆண்: மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

பெண்: நூறாகுறேன்

குழு: பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
பெண்: ஹா... ஆஅ...
குழு: உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

பெண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேத்தேனே உன்ன ஆஞ்சி



Credits
Writer(s): Chand Pasha
Lyrics powered by www.musixmatch.com

Link