Asainthadum Mayil

அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று
சொல்வது போல் தோன்றும்

அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று
சொல்வது போல் தோன்றும்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று
சொல்வது போல் தோன்றும்

அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று
சொல்வது போல் தோன்றும்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ...

இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன்
இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன்
இசைபாடும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
இசைபாடும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்

திசைதோறும் நிறைவாக நின்றான்
திசைதோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான்
திசைதோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான்

எங்காகிலும் எமதிறைவா இறைவா என
மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கு முகத்துடையான்
எங்காகிலும் எமதிறைவா இறைவா என
மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கு முகத்துடையான்
தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான்

ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி
நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட
மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட
மலரணிகள் ஆட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என மனநிறை
முனிவரும் மகிழ்ந்து கொண்டாட

அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று
சொல்வது போல் தோன்றும்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ...

அசைபோடும் ஆவினங்கள் கண்டு
அசைபோடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று
அசைபோடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று

நிஜமான சுகமென்று ஒன்று
நிஜமான சுகமென்று ஒன்று
இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று
நிஜமான சுகமென்று ஒன்று
இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று

இசையாறும் கோபாலன் இன்று
இசையாறும் கோபாலன் இன்று
நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட
இசையாறும் கோபாலன் இன்று
நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட

எங்காகிலும் எமதிறைவா இறைவா என
மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கு முகத்துடையான்
எங்காகிலும் எமதிறைவா இறைவா என
மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கு முகத்துடையான்

ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி
நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட
மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட
மலரணிகள் ஆட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என மனநிறை
முனிவரும் மகிழ்ந்து கொண்டாட

அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று
சொல்வது போல் தோன்றும்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ...



Credits
Writer(s): Rajhesh Vaidhya, Venkata Subbaiyer Oothukadu
Lyrics powered by www.musixmatch.com

Link