Omkara Nadham

எந்த நேரம் உந்தன் நாமம் எடுத்துரைப்பேன் நான் அப்பா
என்னை உந்தன் பக்தன் என்று ஏற்றுக் கொள்வாய் நீ அப்பா(2)
நீலம் மேனி கண்ணனுக்கு நீயும் ஒரு மகனப்பா(2)
நீயின்றி இவ்வுலகில் வேறு எந்த தெய்வம் உண்டப்பா(2)
காரிருளின் நிலவின் ஒலி கண்ணுக்கு ஒலி கொடுக்கும் (2)
காலமெல்லாம் உன் அருளும் என் வாழ்வுக்கு ஒலி கொடுக்கும்
- எந்த நேரம் உந்தன் நாமம்(2)
ஐந்து மலை வாசனென்னும் அழகிய பெயர் உனக்குண்டு(2)
அருளை அள்ளி தருவதிலே உனக்கு ஈடு யார் உண்டு (2)
பம்பை நதி கரையினிலே பரம்பொருளாய் நீ பிறந்தாய்(2)்
உன் பக்தர்களை காதிடவே பாலனாக பிறந்து வந்தாய்
தங்கத்தாலே கொடிமரம் உந்தன் சன்னதியில் நிற்குதப்பா
தல்லாடி வருவோரை தாங்கி என்றும் அனைக்குதப்பா
பதினெட்டாம் படியும் உன்னை சக்தியுடன் தாங்குமப்பா (2)
அந்த படியேறும் பக்தருக்கு பலன் யாவும் கிடைக்குமப்பா(2)
- எந்த நேரம் உந்தன் நாமம்(2)

ஐயப்பா சரணம் ஐயப்பா ...(3)
-parandaman vellore tn ind



Credits
Writer(s): Veeramani Somu, K Somu
Lyrics powered by www.musixmatch.com

Link