Kanaa Kandenadi (From "Parthipan Kanavu")

கனா கண்டேனடி
தோழி

கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி

கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி

உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புரமெது புரிந்தது போலே
கனா கண்டேனடி
உன் முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே

கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி

எதையோ என் வாய் சொல்ல தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நான்கும் ஒட்டி கொள்ள நான் கண்டேன்

நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்து தடுக்க
இதயம் இரண்டும் கட்டி கொள்ள நான் கண்டேன்

ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்
மறு கண்ணில் அமிலம் கண்டேன்
எங்கெங்கோ தேடி தேடி உன்னில் என்னை நான் கண்டேன்

கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி

உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புரமெது புரிந்தது போலே கனா கண்டேனடி
உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே

இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க
படை போல் உன் விரல் பதறி தடுக்க
கூச்சம் உன்னை நெட்டி தள்ள நான் கண்டேன்

கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட நான் கண்டேன்

நிறமில்லா உலகம் கண்டேன்
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்
எங்கெங்கோ தேடி தேடி
என்னில் உன்னை நான் கண்டேன்

கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி
உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புரமெது புரிந்தது போலே
கனா கண்டேனடி

உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே
கனா கண்டேனடி
தோழி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி



Credits
Writer(s): Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com

Link