Yaarai Nambi

யாரை நம்பி நாம் வந்தது
யாரை நம்பி நாம் போவது
தாயால் தோன்றும் உயிர் காலம் தோறும்
கேட்கும் கேள்விதான்

ஓடாது போனால் ஆறில்லையே
ஓய்வாகிப் போனால் நாம் இல்லையே
காலங்கள் யாவையும் மாற்றிவிடும்
காயத்தை நாளைகள் ஆற்றிவிடும்

யாரை நம்பி நாம் வந்தது
யாரை நம்பி நாம் போவது
யாரான போதும் அழுது என்ன லாபம்
நாமாக கேட்பதில்லையே சோகம்
ஓயாமலே பூமியும் வீழாமலே வானமும்
மாறாமலே காட்டுது பாசம்
தானாக வாராது ஏதொன்றுமே
ஆராய்ந்து பார்த்தாலே வேதாந்தமே

யாரை நம்பி நாம் வந்தது
யாரை நம்பி நாம் போவது
தாயாலே தோன்றி தவழ்ந்து வந்த பிள்ளை
தாயாக பார்ப்பதில்லை பெண்ணை
ஓராயிரம் வேதனை நூறாயிரம் சோதனை
நாடோடிப்போல் ஆனதே வாழ்வும்
யாரோடு யாரென்று யார் சொல்வது?
எல்லாமே சூதாட்டம் என் செய்வது?

யாரை நம்பி நாம் வந்தது
யாரை நம்பி நாம் போவது
தாயால் தோன்றும் உயிர் காலம் தோறும்
கேட்கும் கேள்விதான்

ஓடாது போனால் ஆறில்லையே
ஓய்வாகிப் போனால் நாம் இல்லையே
காலங்கள் யாவையும் மாற்றிவிடும்
காயத்தை நாளைகள் ஆற்றிவிடும்

யாரை நம்பி நாம் வந்தது
யாரை நம்பி நாம் போவது



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link