Aariya Udhadugal

ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே

ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே

இதில் யார் தோல்வியுறும் போதும்
அதுதான் வெற்றி என்று ஆகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மனக் கிடங்குகள் தீ பற்றி தித்திதிக்கணும்

ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
—-
எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது மிக பிடித்தது என்னில்
பகல் பொழுதின் பேரழகா
இராத்திரியின் பூரணமா
மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா
மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா

ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களில்
முனங்கலிடும் ஒலி பிடிக்கும்
கட்டில் மேல் எல்லாம் கலைந்த பின்னே பின்னே
கலையாத கொலுசு பிடிக்கும் பிடிக்கும்

என் நாயகா என்னை பிரிகையில்
என் ஞாபகம் தலை காட்டுமா
உன் ஆண் மனம் தடுமாறுமா
பிற பெண்கள் மேல் மனம் போகுமா

ஏ. கண்களே நீயாய் போனால்
வேறு பார்வை வருமா
—-
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே

ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
—-
தேவதை புன்னகை செய்தால்
சிறு தேய் பிறை முழு நிலவாகும்
குறைகுடமாய் நானிருந்தேன்
நிறைகுடமாய் ஏன் நிறைந்தேன்
உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்

ஜீவித நதியனெ விரைந்தாய்
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியினை தாய் கொடுத்தாள்
பிறந்த பயன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என பெண் தான் பெண் தான்
பெண்ணுக்கு முழுமை என ஆண் தான் ஆண் தான்

அடி காற்றினால் வான் நிறையுது
நம் காதலால் உயிர் நிறையுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே
நீ என்னதான் எதிர் பார்கிறாய்

ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் தொடுமா

ஆரிய உதடுகள் உன்னது

திராவிட உதடுகள் உன்னது

ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே

ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே

இதில் யார் தோல்வியுறும் போதும்
அதுதான் வெற்றி என்று ஆகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்

மன கிடங்குகள் தீ பற்றி தித்திதிக்கணும்



Credits
Writer(s): Harris Jayaraj, K Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link