Aanazhagu

ஆணழகு இப்படித்தான் இழுக்குமா
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா

ஆணழகு இப்படித்தான் இழுக்குமா
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா
கண்ணிரண்டும் சொருகுதே காரணம் என்ன
உன்னிடத்தில் இருந்திடும் ஆயுதம் என்ன
நீரலையில் மயிலிறகாய் கன்னி உடல் மிதக்குதே அதிசயம் என்ன

ஆணழகு இப்படித்தான் இழுக்குமா
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா

மனசு மறை கழண்டு போகுதே
உன் மார்பில் சாய்ந்து கொள்ள ஏங்குதே
தரையில் மீனை போல புரளுதே
என் தாகம் கரைபுரண்டு ஓடுது
வடிவான அழகோடு வந்தாயே கண்ணாளா
கொடி தேகம் செழிப்பாக வழி ஒன்று சொல்வாயா
நான் தேடும் மகரந்தம் நீதானே

ஆணழகு இப்படித்தான் இழுக்குமா
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா

உன்னை விரும்புகிறேன் ஆழமாய்
என் உலகம் கரைவதென்ன மாயமாய்
விலகி நீ இருந்தால் நியாயமா
வா உருட்டி விளையாடு தாயமாய்

நினைத்தாலும் அணையாத நெருப்பொன்று நெஞ்சோடு
உன் அணைப்பாலே அணையாதோ அன்பே வா என்னோடு
ஆசைக்கு அணை போடக்கூடாது

ஆணழகு இப்படித்தான் இழுக்குமா
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா
கண்ணிரண்டும் சொருகுதே காரணம் என்ன
உன்னிடத்தில் இருந்திடும் ஆயுதம் என்ன
நீரலையில் மயிலிறகாய் கன்னி உடல் மிதக்குதே அதிசயம் என்ன

ஆணழகு...



Credits
Writer(s): Viveka, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link