Andhi Varum Neram Vandhadhu

அந்தி வரும் நேரம்... வந்ததொரு ராகம்
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம்... இனி தீராதோ தாகம்
ஏதேதோ மோகம்... இனி தீராதோ தாகம்
அந்தி வரும் நேரம்

மந்திரங்கள் ஒலித்தது
மங்கை உடல் சிலிர்த்தது
சங்கமத்தின் சுகம் நினைத்து
சிந்து கவி பிறந்தது
சிந்தனைகள் பறந்தது
சந்தனத்து உடல் அணைத்து
இதழில் ஒரு ஓலை
எழுதும் இந்த வேளை
இளமை என்னும் சோலை
முழுதும் இன்ப லீலை ஹா
நீராடுது மாதளிர் தேகம்
போராடுது காதலின் வேகம்
என்றென்றும் ஆனந்த யோகம்

அந்தி வரும் நேரம்... வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம்... இனி தீராதோ தாகம்

இன்பத்துக்கு முகவுரை
என்றுமில்லை முடிவுரை
நீ இருக்க ஏது குறை
பாதம் முதல் தலை வரை
பார்த்து நின்ற தலைவரை
பாட வந்தேன் நூறு முறை
அணைத்தால் தேவலோகம்
அருகே வந்து சேரும்
நினைத்தால் இங்கு யாவும்
இனிமை என்று கூறும்
ம்ம் ஆஹா இது மார்கழி மாதம்
அம்மாடியோ முன்பனி வீசும்
சூடேற்றும் பூமுல்லை வாசம்

அந்தி வரும் நேரம்... வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம்... இனி தீராதோ தாகம்
ஏதேதோ மோகம்... இனி தீராதோ தாகம்



Credits
Writer(s): Ilayaraja, Muthulingam, Pulamaipithan, Kamarajan Na
Lyrics powered by www.musixmatch.com

Link