Naanum Unnil Paadhi

நானும் உன்னில் பாதி
நீயும் என்னில் பாதி
ஒன்றில் ஒன்றாய் கலப்போம்
இந்த உலகினை மறப்போம்

ஆசை வந்தது இயற்கை
ஆடை வந்தது செயற்கை
யாகம் யாகம் காமதேவ யாகம்
யோகம் யோகம் பூர்வஜென்ம யோகம்

அச்சம் வந்தால் தொடாதே
ஆசை வந்தால் விடாதே
அழகெல்லாம் உனதாக நான் கொடுக்கிறேன்

பிரம்மன் என்னை படைச்சான்
காமண்டலத்தில் எடுத்தான்
மஹராசி முகராசி உனை சொக்க வைக்குமே

நானும் உன்னில் பாதி
நீயும் என்னில் பாதி

இரவெல்லாம் தூங்காமல்
இரவெல்லாம் தூங்காமல்
தவம் இருப்பேன்
யார் வந்து கேட்டாலும்
வரம் கொடுப்பேன்

ஆடைக்கு... விடை கொடு விடை கொடு விடை கொடு
ஆசைக்கு... விலைக் கொடு விலைக் கொடு விலைக் கொடு
என் வாழ்க்கை என்னோடு
யாரும் இல்லை கேட்பதற்கு
சுகம் சுதந்திரமே

போதாது... போதாது...
ஏக்கத்தில் நானிங்கு தவிப்பதென்ன
உன் உள்ளம் தாங்காமல் துடிப்பதென்ன
கட்டிக்கொள்... ஒட்டிக்கொள்...
கஜூராஹோ சிற்பம் போல் பசி தாகம் தெரியாமல்
நாம் கலந்திருக்கலாம்

நானும் உன்னில் பாதி
நீயும் என்னில் பாதி
ஒன்றில் ஒன்றாய் கலப்போம்
இந்த உலகினை மறப்போம்

ஆசை வந்தது இயற்கை
ஆடை வந்தது செயற்கை
யாகம் யாகம் காமதேவ யாகம்
யோகம் யோகம் பூர்வஜென்ம யோகம்

அச்சம் வந்தால் தொடாதே
ஆசை வந்தால் விடாதே
அழகெல்லாம் உனதாக நான் கொடுக்கிறேன்

பிரம்மன் என்னை படைச்சான்
காமண்டலத்தில் எடுத்தான்
மஹராசி முகராசி உனை சொக்க வைக்குமே

நானும் உன்னில் பாதி



Credits
Writer(s): Sivamani
Lyrics powered by www.musixmatch.com

Link