Entha Kangal Erandum Kathal

இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள்
அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள்
குளிர் காற்றில்
தினம் தினம் ஏற்றி
குளிர் காற்றில்
தினம் தினம் ஏற்றி
அடி கண்ணே பசும்பொன்னே
தமிழ் பாடல்கள் நான் தீட்டவோ

இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள்
அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள்

அங்கங்கே தொங்கும் தோட்டம்
அது அசையும் மேகக் கூட்டம்
ஆஆஆ அங்கங்கே தொங்கும் தோட்டம்
அது அசையும் மேகக் கூட்டம்

பறக்கும் எங்கும் மின்னல் கொடிகள்
விண்ணில் பாலமிடவோ மலைகள்
பறக்கும் எங்கும் மின்னல் கொடிகள்
விண்ணில் பாலமிடவோ மலைகள்

அந்திமாலை சிங்கார தென்றல் அலைகள்
எங்கெங்கோ உன்னை போய் தழுவும்
எங்கெங்கோ உன்னை போய் தழுவும்

இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள்
அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள்
குளிர் காற்றில்
தினம் தினம் ஏற்றி
மலர் கண்ணா எந்தன் மன்னா
தமிழ் பாடல்கள் நான் தீட்டவோ

இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள்
ஹா ஹா ஹா அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள்

தங்கத்தில் நாதஸ்வரங்கள்
மடல் தாழம் பூவின் இதழ்கள்
ஆ ஆ தங்கத்தில் நாதஸ்வரங்கள்
மடல் தாழம் பூவின் இதழ்கள்

சுவைத்தேன் சிந்தும் அந்த இசையில்
முதல் நாளில் சந்திக்கும் இரவே
சுவைத்தேன் சிந்தும் அந்த இசையில்
முதல் நாளில் சந்திக்கும் இரவே

மலர் கட்டில் கண்ணாடி காட்டும் நிழலில்
இன்பத்தின் பிம்பங்கள் துள்ளட்டும்
இன்பத்தின் பிம்பங்கள் துள்ளட்டும்

இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள்
அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள்
குளிர் காற்றில்
தினம் தினம் ஏற்றி
அடி கண்ணே பசும்பொன்னே
தமிழ் பாடல்கள் நான் தீட்டவோ

இந்த கண்கள் ரெண்டும் காதல் தீபங்கள்
ஹா ஹா ஹா அந்த காமன் தந்த வண்ணக் கோலங்கள்



Credits
Writer(s): Vaali, Pulamaipithan, Adhithyan, Ganesh Shankar
Lyrics powered by www.musixmatch.com

Link