Vaangum Panathukkum (From "Dhoni")

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைகுமே ஒரு சம்பந்தமில்லை
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும் சம்பந்தமில்லை
எண்ணைய தேச்சு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை
கண்ணுக்கு முன்னால நடப்பதெல்லாம் கனவுமில்லை

வாடக வீட்டுல வீசுற காத்துக்கு கட்டணம் உண்டாடா
இருப்பதுதான் போதும் என்பவம் ஒருத்தன் உண்டாடா
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான் பாத்தவன் உண்டா

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைகுமே ஒரு சம்பந்தமில்லை
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும் சம்பந்தமில்லை
அண்ணைக்கும் இன்னைக்கும் என்னைக்கும்
இந்த அன்னனங்கசி வாழ்கை
கனவில்தானே நமக்கு பல அரண்மனைகள் இருக்கு
தண்ணிக்கும் தாரைக்கும் அலையும்
ஒரு வாத்த போல வாழ்க்க
மனசில் சிறகு விரிச்சா நாம பறக்க முடியுமா?

சந்திரனும் இருக்கு நட்சத்திரம் இருக்கு
எண்ணி எண்ணி பாரு அது வெள்ளி பணம் நமக்கு
ஒலகம் யாவும் சொந்தமுன்னாலும் ஏழைங்கதான்

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைகுமே ஒரு சம்பந்தமில்லை
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும் சம்பந்தமில்லை
கும்முடு போட்டு போட்டே நாம குனிஞ்சு வளைஞ்சு போனோம்
கூனும் விழுகல மனம் கூறி போச்சுடா
உறவு நறைய இருக்கு, அது செலவுதானே நமக்கு
சேத்து வெச்ச சொத்து அது நட்புதானடா

தண்டவாளம் நடுவே பூத்த பூவ போல
சோகத்திலும் சிரிப்போம் சோதனையில் மொளைப்போம்
அடுத்த நாளை அடுத்த நாளில் பார்க்கலாம்

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைகுமே ஒரு சம்பந்தமில்லை
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும் சம்பந்தமில்லை
வாடக வீட்டுல வீசுற காதுக்கு கட்டணம் உண்டாடா
இருப்பதுதான் போதும் என்பவம் ஒருத்தன் உண்டாடா
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான் பாத்தவன் உண்டா

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைகுமே ஒரு சம்பந்தமில்லை
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும் சம்பந்தமில்லை

Credits
Writer(s): Na. Muthukumar, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link