Baaram

ஏ-ஓ-ஓ-ஓ-ஏ

பாரம் மனதின் ஓரம் வந்து வந்து சேரும்
காரணம் ஏன் என்பாயோ?
வானம் ஓஹூ- ஓஹூ பூமி
வந்து வந்து சொல்லும் தேவனை நீ மறந்தாயோ?

தூரத்திலே வெகு தூரத்திலே உன் அன்பை தள்ளினேன்!
துயரத்திலே கடும் துயரத்திலே உன் அன்பை அள்ளினேன்
தாயன்பை தேடி அலைந்தேன் நிழல் எல்லாம் நிஜம் என்றேன்
தாயன்பை தேடி அலைந்தேன் நிழல் எல்லாம் நிஜம் என்றேன்
எந்நாளும் மறவேன் உமது அன்பை
உவாஹு-வோ-ஓ-ஹோ

பாரம்(பாரம்) மனதின் ஓரம் (மனதின் ஓரம்) வந்து வந்து சேரும் (வந்து வந்து சேரும்)
காரணம் ஏன் என்பாயோ?
வானம் ஓஹூ- ஓஹூ பூமி
வந்து வந்து சொல்லும் தேவனை நீ மறந்தாயோ?

நீர் வருகையிலே உம் பார்வையிலே என் வாழ்வும் முடிகிறது
உம் அருகினிலே சந்தோஷத்திலே என் வாழ்வும் தொடர்கிறது
நீர் எந்தன் பாடலின் ராகம் அதுவே எனக்கொரு தாகம்
நீர் எந்தன் பாடலின் ராகம் அதுவே எனக்கொரு தாகம்
எந்நேரம் அறிவேன் உமது அன்பை
உ-வாஹு-வாஹு-வாஹு-வாஹா

பாரம் மனதின் ஓரம் வந்து வந்து சேரும்
காரணம் ஏன் கேட்பாயோ?
வானம் ஓஹூ- ஓஹூ-ஓஹூ பூமி
வந்து வந்து சொல்லும் தேவனை நீ மறந்தாயோ?



Credits
Writer(s): Vijay Ebenezer, Pandiyan Moses
Lyrics powered by www.musixmatch.com

Link