Sundari Pennae

சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சில உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்லடி மெதுவா
சட்டென்று தொட்ட அவ்னோடு எண்ணம் என் கனவா

சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ

சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சில உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு

எப்படி இருந்தான் என்று உன்னை அறிந்தான்
உன் விழி அழகின் விழுந்த உடன் எதை பேசினான்
எப்படி சிரித்தான் எத்தனை கொடுத்தான்
தன்னிலை மறந்த பிறகு அவன் எதற்கு ஏங்கினான்

எந்த இடத்தில் உன்னை அவனும் கண்டுபிடித்து தொலைந்தான்
எந்த நொடியில் உன்னை நெருங்கி கட்டி பிடிக்க முனைந்தான்
எதை சொல்லி அவன் உன்னை களவாடினான்

சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சில உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு

எத்தனை விதமாய் உன்னையும் புகழ்ந்தான்
என்பதை அறிய வருகிறது ஒரு ஆசையே
உன்னையும் ஒருவன் வென்றிட பிறந்தான்
என்பதை உணர முடிகிறது உயிர் தோழியே

இந்த பிறவி கொண்ட பயனை அன்பில் விளங்கிவிடடி
எல்லா அறையில் என்னை கடந்து செல்லு அவனை திருடி
அடையாளம் உனக்கென்றும் அவன் தானடி

சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சில உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்லடி மெதுவா
சட்டென்று தொட்ட அவ்னோடு எண்ணம் என் கனவா

சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ

Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link