Anbil Avan (From "Vinnathaandi Varuvaayaa")

அன்பில் அவன்
சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என
இணைத்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில், மழை
பாலை, சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான்
ஹ்ம்ம் நீங்கள் போனாலே
கண் பட்டு காய்ச்சல் தான்
வாராதோ வாராதோ

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்

இனிமேல் புயல் வெயில் மழை
பாலை, சோலை இவை
ஒன்றாக கடப்போமே

நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
எங்கு என்று அதை பயின்றோம்
பூமி வானம் காற்று
தீயை நீரை மாற்று
புதியதாய் கொண்டு வந்து நீட்டு

நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே
கண் பட்டு காய்ச்சல் தான்
வாறதோ வாறதோ

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே
கண் பட்டு காய்ச்சல் தான்
வாராதோ வாராதோ

காதல் எல்லாம் தொலையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே



Credits
Writer(s): A R Rahman, S Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link