Indha Mandratthil Odivarum (From "Policekaran Magal")

சில பாடல்கள நாம கேக்கும் போது ग़ज़ल form ல இருக்கும்
அது வந்து தமிழ்ல நாங்க try பண்ணனும்னு ஆசைபட்டு தான்
ம்-ம்-இதே பாட்டுக்கு हिंदी வார்த்தைன்னா எப்படின்னு
நீங்க கற்பனை பண்ணி பாருங்க
இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்

இது வந்து ग़ज़ल பாணி
இதே हिंदी வார்த்தை போட்டா ग़ज़ल மாறி ஆயிடும்
அந்த மாதிரி பாடல்கள்லாம்
எனக்கு நிறைய பாதிப்பு இருந்துது
அப்படி சில பாடல்கள்லாம் பண்ணனும்னு ஆசைபட்டேன்
அதுக்கு சந்தர்ப்பம் கொடுத்த, ஸ்ரீதர் வாழ்க
Police காரன் மகள் கின்ற படத்துலயே
என்னை என்னென்ன ஆசையா இருக்குன்னு
நான் கேட்டுருவேன் director ட்டேயும் producer ட்டேயும்
இப்படி போடனும்னு ஆசையா இருக்கு
அதுக்கு அருமையான voice'u
இன்னைக்கு முழுக்க, அவங்களுக்கு வயசானாலும்
அவங்க voice'u க்கு வயசாகல அதான் ஜானகியம்மா
அதுக்கு தகுந்த மாதிரி இந்த படத்துல ரெண்டு பேரும்
PBS'u ம், அதாவது இது நியாயமா பாத்தா love duet அல்ல
இத love duet ன்னு தெரியாம அண்ணனும் தங்கையும்
பாடிக்கிற ஒரு விரக தாபம்
தங்கை மேல அண்ணனுக்கு ஒரு பரிதாபம்
இதெல்லாம் ஏற்படற மாறி ஒரு பாடல் இது
அந்த பாடலுக்கு வார்த்தையும் சரி
அதுக்கு அமைச்ச tune'u ம் சரி
காலத்தால அழிக்கமுடியாத ஒரு கற்பனை

இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்

வண்ண மலர்களில் அரும்பாவாள்
உன் மனதுக்கு கரும்பாவாள்
இன்று அலைகடல் துரும்பானாள்
என்று ஒரு மொழி கூறாயோ

இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்

நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்தபின் துயில்கின்றாள்
எனும் வேதனை கூறாயோ

இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்

தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள்
எனும் அதனையும் கூறாயோ

இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்



Credits
Writer(s): Kannadhasan, Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, Manayangath Subramanian Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link