Kandaen Kanmaniyae (From "Renigunta")

கண்ணே கண்மணியே
கருகும் மின்மினியே
காலம் மாறிவிடும் கலங்காதே
ஜன்னல் திறந்து வைத்தால்
காற்றில் வெளிச்சம் வரும்
காயம் ஆறிவிடும் வருந்தாதே
விழியில் விழியில்
கண்ணீர் ஏன் வந்தது
இதயம் எரிந்து இமயம் அழுகின்றது
நூலிலே ஆடிடும் பொம்மைகள் நாமடா
கனவுகள் காண்பதே வீண்டா

ஏழைகள் எந்த நாளுமே
மனதோடு ஆசைகள் வளர்ப்பதும்
அதன் வழி நடப்பதும் தவறில்லை
ஆயினும் அவையாவுமே
விதி கேட்கும் கேள்விக்கு
விடை சொல்ல வழியின்றி
கலைந்திடும் வழிப்பாதைகள்
இளமைக்காலம் அழகிய காலம்
இவளுக்கு கிடைக்கவில்லை
பருந்துகள் துறத்தும் வானத்தில்
வண்ணத்துப்பூச்சிக்கு இடமுமில்லை

வானவில் இவன் வானவில்
விழி பார்த்திடும் நேரத்தில்
பாதியில் கரைவதும் ஏன்

நூலிலே ஆடிடும் பொம்மைகள் நாமடா
கனவுகள் காண்பதே வீணடா

காதலும் அலைபோலவே
கரைதாண்டிட வழியின்றி
திரும்பிட மனமின்றி
நுரையுடன் அலைந்திடுமே
ஊமையின் கனவாகவே
வெளியேறவும் வழியின்றி
உரைத்திட மொழியின்றி
உயிருடன் இறந்திடுமே
இதயம் என்பது சத்தியமாக
இறைவனுக்கில்லையடா
இதயம் மட்டும் அவனுக்கு இருந்தால்
துன்பங்கள் இல்லையடா
வேதனை தினம் வேதனை
நதி தேங்கிடும் வேளையில்
தொனிகள் போவதெங்கே

நூலிலே ஆடிடும் பொம்மைகள் நாமடா
கனவுகள் காண்பதே வீண்டா



Credits
Writer(s): N Muthu Kumaran, Ganesh Raghavendran
Lyrics powered by www.musixmatch.com

Link