Devane Naan

தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்

மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்

யாக்கோபைப் போல் போகும் பாதையில் பொழுதுபட்டு
இராவில் இருள் வந்து மூடிட
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா

தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்

பரத்திற்கேறும் படிகள் போலவே என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை அழைத்து
அன்பின் தூதனாகச் செய்யும்

தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்

நித்திரையினின்று விழித்து – காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய், என் துயர் கல் நாட்டுவேனே
என்றான் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்



Credits
Writer(s): Augutin Ponseelan
Lyrics powered by www.musixmatch.com

Link