Yengirindhu Vandhaayo

எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

வாசத்தண்ணி தெளிக்கையில
வந்து நீயும் நனைக்கிறியே
துணிமணிய துவைக்கையிலே
என்ன நீயும் புளியுறயே

ஆஞ்சி வச்ச கீர போல
நினைப்புல தான் கரையுரியே
அம்மி வச்ச தேங்கா சில்லா
அடி மனச நசுக்குறியே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ

நடக்கையில தொடர்ந்து வர
வழி நடுவே மறஞ்சுடுவ
தலைமுடிய ஒதுக்கையில
வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுவ

கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன
கழுவிவிட மனமில்லையே
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன
ஒதர ஒரு வழி இல்லையே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

உயிரோடு உறைந்தாயே...



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link