Atthuvaana Kaatukku

அத்துவான காட்டுக்கு
தப்பி வந்த ஆட்டுக்கு
தாய்மடி அமஞ்சதடா

கல்லிருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்ததடா

ஊரோ உறவோ வறண்டே கெடக்கு
உசுர நெனைக்க மழையும் இருக்கு
பெத்தவ இல்லயே மத்தவ இல்லயே
இவ சாமி சொல்லி வந்தவ

அத்துவான காட்டுக்கு
தப்பி வந்த ஆட்டுக்கு
தாய்மடி அமஞ்சதடா

கல்லிருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்ததடா

ஓ அவ என்ன தாயா
நீ என்ன மகனா
அடடா பாசம் துளிர் விடுமே

கருங்கல் இடுக்கில்
காக்கை இட்ட
எச்சத்தில் ஆலமரமே வருமே

தேசம் விட்டு போகும் போதும்
வானம் என்ன நீளம்தான்
பாசம் உள்ள சேலையில் எல்லாம்
தாய் பாலின் வாசம்தான்

பச்ச மொளகாயில்
பாசம் இனிக்குதே
ஆத்தா வாசமோ சோத்துல வீசுதே

இடம் பொருள் ஏவல்
அமைவதை பொறுத்தே
உறவும் பிரிவும் ஏற்படுமே

யாரும் அற்ற காட்டில்
பேச்சு துணை யாரு
சிட்டு குருவி போதுமே

ஒத்த மரமாகி போன
இத்து போன பொம்பள
மகிழ்ந்துதான் பூத்து போனா
மகன் வந்த தெம்புல
நஞ்சு போன வாழ்க்கை சொந்தமே தேடுமே
பிஞ்ச கொடையும் மழைக்கு போதுமே

அத்துவான காட்டுக்கு
தப்பி வந்த ஆட்டுக்கு
தாய்மடி அமஞ்சதடா

கல்லிருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்ததடா ஆஹ



Credits
Writer(s): Vairamuthu, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link