Kaadhal Dhana Kaadhal

காதல் தானா?
காதல் தானா? ஏன் நெஞ்சுக்குள்ளே
நீ வந்துப் போனா
மெளனம் தானா?
மெளனம் தானா? ஏன் வார்த்தை எல்லாம்
இனி மெளனம் தானா?

இது பொல்லாத மாற்றம்
பொய் இல்லாத மாற்றம்
இது பொல்லாத மாற்றம்
பொய் இல்லாத மாற்றம்
இது எல்லாம் எல்லாம் உன்னால் தானா?

காதல் தானா? ஓ... அஅஆ

மண்ணுக்குள்ள வைரம் போல
மனசுக்குள்ள நீ இருக்க
எப்படி வந்த எனக்குள்ள?
சாமி குறி சொல்லவில்ல
சாதகமும் பேசவில்ல
சம்மந்தம் இருக்கா நமக்குள்ள?
கல்வெட்டுப் போல உன் நெனப்பு நெஞ்சில்
கரையாம கிடந்தா கதகதப்பு
தல சுத்திப் போனேன் அதனால
தலகீழானேன் உன்னால
ஏன் வீட்டுச் சன்னல் திறந்தா
உன் மூச்சுக் காத்தே வருது
ராவெல்லாம் பகலாட்டம் நிறம் மாறி போயாச்சு

காதல் தானா? அஅஆ... ஓ

கண்ணால செய்தி சொன்ன
காயமின்றி என்ன கொன்ன
காரணம் எனக்கு புரியவில்ல
நூறு கோடி பூக்கள் மேல
மிதக்குறேனே காத்தப் போல
ஒரு வேளை காதல் காரணமா?

இடம் தேடி வந்த வெள்ளக்காரா
என் மனச திருடிய கொள்ளக்காரா
இடம் தேடி வந்த வெள்ளக்காரா
என் மனச திருடிய கொள்ளக்காரா

உன் சுவாசம் எங்கே என்று
காத்தெல்லாம் தேடிப் பார்த்தேன்
தினந்தோறும் அது வந்து
எனை மோதிப் போகிறதே

காதல் தானா?
காதல் தானா? ஏன் நெஞ்சுக்குள்ளே
நீ வந்துப் போனா
மெளனம் தானா?
மெளனம் தானா? ஏன் வார்த்தை எல்லாம்
இனி மெளனம் தானா?

இது பொல்லாத மாற்றம் (இது பொல்லாத மாற்றம்)
பொய் இல்லாத மாற்றம் (பொய் இல்லாத மாற்றம்)
இது பொல்லாத மாற்றம்
பொய் இல்லாத மாற்றம்
இது எல்லாம் எல்லாம் உன்னால் தானா?
இது பொல்லாத மாற்றம்
பொய் இல்லாத மாற்றம்
இது எல்லாம் எல்லாம் உன்னால் தானா?

காதல் தானா? ஆஆஆ... அஅஅ



Credits
Writer(s): Snehan, Nivedhan
Lyrics powered by www.musixmatch.com

Link