Anbe Anbe

அன்பே அன்பே

உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்

காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி

உன்னுடன் நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி

கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்



Credits
Writer(s): N Muthu Kumaran, Prakashkumar Govindarajan Venkate
Lyrics powered by www.musixmatch.com

Link