Kaatru Veliyil (From "Un Samayalaraiyil")

காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை தேடி தவிக்கின்றேன்
காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை தேடி தவிக்கின்றேன்

ஒரு கடலை போல் இந்த இரவு தூங்கவில்லை மனது
மிக உயரத்தில் அந்த நிலவு மங்கலான கனவு
மங்கலான கனவு

சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை தேடி தவிக்கின்றேன்

உன் வழியில் உதிர்ந்து கிடப்பது
பூக்கள் அல்ல என் கண்கள்
உன் வானில் விம்மி தவிப்பது
மீன்கள் அல்ல என் நெஞ்சம்

சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை தேடி தவிக்கின்றேன்



Credits
Writer(s): Raaja Ilaiya, Palani Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link