Needhaane

நீதானே நீதானே
நீர் இல்லை நீதானே
நீதானே நீதானே
தாவும் தீ நீதானே

நாளெல்லாம் உன்னாலே
வென்றாடு மண்மேலே
யார் வந்து நிற்பாரோ
உன் பார்வை முன்னாலே

கூட்டத்தில் நின்றாலும்
கோபத்தை மாற்றாதே
காலத்தை வென்றாலே
ஆகாயம் கால் கீழே

நீதானே நீதானே
நீர் இல்லை நீதானே
நீதானே நீதானே
தாவும் தீ நீதானே

நாளெல்லாம் உன்னாலே
வென்றாடு மண்மேலே
யார் வந்து நிற்பாரோ
உன் பார்வை முன்னாலே

கூட்டத்தில் நின்றாலும்
கோபத்தை மாற்றாதே
காலத்தை வென்றாலே
ஆகாயம் கால் கீழே
நீயா... நீயா... நீயா...

நிழலாய் இருப்பாய்
நிஜத்தின் பின்னாலே
கதிராய் முளைப்பாய்
விடியும் முன்னாலே

சூரியன் உன்னோட
விதியின் தாய் வீடு
காரியம் கைக் கூட
கனல் மேல் நீராடு

ஊமையாய் வாழ்ந்தால்
உயிரே தோற்கும்
தாமரை பூவா தரைமேல் பூக்கும்
நெருப்பென வாழ்வாயே நீயே நீயே...

நீதானே நீதானே
நீர் இல்லை நீதானே
நீதானே நீதானே
தாவும் தீ

மரத்தை அறுத்து
சிலுவை செய்யாதே
குடிநீர் மறந்த நதியாய் ஓடாதே
ஓவியம் இல்லாமல்
நிறமோ வாழாதே
ஓட்டைகள் இல்லாமல்
குழலோ கூவாதே

ஊழ்வினை என்றால்
எதுவும் இல்லை
வாழ்வினை வென்றால்
வானம் எல்லை
தடைகளை நீதாண்டி
செல்வாய் வெல்வாய்
நீயா

நாளெல்லாம் உன்னாலே
வென்றாடு மண்மேலே
யார் வந்து நிற்பாரோ
உன் பார்வை முன்னாலே

கூட்டத்தில் நின்றாலும்
கோபத்தை மாற்றாதே
காலத்தை வென்றாலே
ஆகாயம் கால் கீழே
நீயா... நீயா... நீயா...



Credits
Writer(s): Kabilan, Nivas K Prasanna
Lyrics powered by www.musixmatch.com

Link