Enna Janmam

என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம்
தாங்கவில்லை இவர் படும் துயரம் ஹோ ஓ...
துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம்
மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ...

பெண்ணாய் பிறந்தவர்
வாழ்க்கையே போராட்டமா
அந்நாளில் எவனோ எழுதி வைத்த மாறாட்டமா
ஓ இறைவா பதில் கூறு ஹோ ஓ...

என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம்
தாங்கவில்லை இவர் படும் துயரம் ஹோ ஓ...
துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம்
மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ ஓ...

பெற்றவள் போய்ச் சேர்ந்தாள்
தந்தை என இருந்தவன் தனி ஆனான்
மற்றவள் தாயானாள்
கொட்டுகின்ற கொடுமையின் வடிவானாள்

பள்ளி செல்லும் வயதினிலே
கற்றுக் கொண்ட பாடத்துக்கு அளவில்லையே
சுமக்கிற வயதில்லையே
இந்தச் சுமை தொலைகிற வழி இல்லையே

சோகம் ஒன்றே சொந்தம் என்று
சொர்ணக்கிளியும் தனி ஆனாள்
சோர்ந்து சோர்ந்து ஓய்ந்து நின்று
காய்ந்து போன கனி ஆனாள்

தொடரும் துயரங்கள்
இவளை வைரங்கள் ஆக்காதோ
மலர் பூக்காதோ

என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம்
நெஞ்சு கொதிக்குது இவர் படும் துயரம் ஹோ ஓ...
துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம்
மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ ஓ...

தனியாய் பெண் ஒருத்தி
உலகினில் வாழ்வது சாத்தியமா
துணை இன்றி வாழ்வதென்றால்
உண்மையில் நடக்கின்ற காரியமா

பெண் ஒருத்தி வீதியில் சென்றால்
துரத்திடும் கண்களுக்கு கணக்கில்லையே
பங்கு போட்டு கெடுக்க எண்ணும்
கேடு கெட்ட ஆண்களுக்கு வழக்கில்லையே

காமப் பேய்கள் ஆடும் ஆட்டம்
கால தேவன் இவர் கையில்
காண்பதெல்லாம் மிருகக் கூட்டம்
மனித இனமே யார் கையில்

வாழ வழி இன்றி
சாக விதி இன்றி அழுவாரோ
மண்ணில் விழுவாரோ

என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம்
நெஞ்சு கொதிக்குது இவர் படும் துயரம் ஹோ ஓ...
துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம்
மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ ஓ...

பெண்ணாய் பிறந்தவர்
வாழ்க்கையே போராட்டமா
அந்நாளில் எவனோ
எழுதி வைத்த மாறாட்டமா
ஓ இறைவா பதில் கூறு ஹோ ஓ...

என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம்
நெஞ்சு கொதிக்குது இவர் படும் துயரம் ஹோ ஓ...
துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம்
மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ ஓ...



Credits
Writer(s): Ilaiyaraaja, Ponnadiyan
Lyrics powered by www.musixmatch.com

Link