Kadhal Vandum

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
என்னை கொல்லாதே
சொல்லாமல் செல்லாதே

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
என்னை கொல்வாயோ
உன் காதல் சொல்வாயோ

இதயத்திலே ஒரு வலி
இமைகளிலே பலதுளி
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்

வார்த்தை ஒன்றிலே
வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தயே
ஒரு சொல்லில் சுத்திடு

விதியின் கைகளோ
வானம் போன்றது
புரியும் முன்னமே
மனம் சாம்பலாகுது
நினைவு இடறி மண்ணில் விழுகிறதே
நிழலில் கரைந்து அது சாகாதா
காதல் கதறி இங்கு அழுகிறதே
இரண்டு கண்ணும் அதில் கருகாதா

ஏன்தான் காதல் வளர்த்தேன்
அதை ஏனோ என்னுள் புதைத்தேன்
சுடரில்லாத தீயில் எரிகின்றேன்
சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்

பெண்ணே உன் பாதையில் நகரும் மரமாகுவேன்
ஓஹோ இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி
ஓ ஓ இதயம் கொண்டு போனால் என்னடி

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
என்னை கொல்வாயோ
உன் காதல் சொல்வாயோ
காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே
ஏங்கும் என்னை கொல்லாதே
சொல்லாமல் செல்லாதே

ஓ காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
என்னை கொல்வாயோ
உன் காதல் சொல்வாயோ

இதயத்திலே ஒரு வலி
இமைகளிலே பலதுளி
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்

வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தயே ஒரு சொல்லில் சுத்திடு
விதியின் கைகளோ வானம் போன்றது
புரியும் முன்னமே மனம் சாம்பலாகுது



Credits
Writer(s): Srikanth Deva, Thenmozhi
Lyrics powered by www.musixmatch.com

Link