Lesa Parakkudhu (From "Vennila Kabadi Kuzhu")

காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

சுண்டெலி வலையில நெல்ல போல் உந்தன்
நெனப்ப எனக்குள்ள சேக்குற
அல்லிப்பூ குளத்துல கல்ல போல் உந்தன்
கண் விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்னேன்

கருச்சாங் குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

தத்தி தத்தி போகும் பச்சை புள்ள போல
பொத்தி வெச்சுத் தானே மனசு இருந்ததே
திருவிழா கூட்டத்தில் தொலையுறேன் சுகமா

தொண்ட குழி தாண்டி வார்த்தை வரவில்லை
என்னென்னவோ பேச உதடு நெனச்சது
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரி பகலா தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி
பூட்டுன வீட்டுல தான் புதுசா பட்டாம்பூச்சி பறக்குதடா

கருச்சாங் குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
பூவா விரியிற உலகம் உலகம்
தரிசா கிடந்தது இது வரை

ஒத்த மரம் போல செத்து கெடந்தனே
உன்னை பாத்த பின்னே உசுரு பொழச்சது
சொந்தமா கிடைப்பியா சாமிய கேப்பேன்

ரெட்டை ஜடை போட்டு துள்ளி திரிஞ்சேனே
உன்னை பார்த்த பின்னே வெட்கம் புரிஞ்சதே
உனக்கு தான் உனக்கு தான் பூமியில் பொறந்தேன்
காவடி சுமப்பது போல் மனசு காதலை சுமக்குதடா
கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்குதடி

கருச்சாங் குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்



Credits
Writer(s): N Muthu Kumaran, V. Selvaganesh
Lyrics powered by www.musixmatch.com

Link