Isai Veesi

இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல்
நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம்
ஆயிரம் கோடி ஆசை இங்கே
ஆயினும் எந்தன் நெஞ்சம் சத்தத்தை

இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்
ஏன் எதனால் புதிதாய் மயக்கம்
முழுதாய் தொலைந்தேன் முதல் பார்வையிலே
நிலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல் நான் பார்க்க

இழுத்தாயே உயிரைக் கொஞ்சம்

மனதின் குழியில் துளிகள் பறித்து
உனது இசையில் பாடினேன்
கனவை கலைக்க துளிகள் தெளிக்க
முகில்கள் தேடி ஓடினேன்...

இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்

நான் அறிஞ்ச தோலை
நீ உறித்த வேளை
மனதின் துகிலை கலைந்தாலே
ஆடையற்ற என் நெஞ்சை
பார்வை கொண்டு போத்தி
நெருப்பை அடைத்து பிணைத்து
உள்ளம் எனைக் கொள்ளை கொல்ல

இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல்
நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம்
மலர்கள் திறக்கும் குளிர்கள் பிடிக்கும்
இவளின் துடிப்பும் பிடித்தாயடா
சிறகின் சிரிப்பில் இசைகள் பறித்தாய்
இவளின் சிரிப்பும் பறித்தாயடா



Credits
Writer(s): Madhan Karky, Sj Suryah
Lyrics powered by www.musixmatch.com

Link