Kallaimattum Kandal

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு

பஞ்ச அக்ஷரம் பார்க்காது
ஊழல் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்

ஞான கண்ணில் பார்த்தால் யாரும் சுத்தம் தான்

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் நிலை மாறாது
இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் நிலை மாறாது
வீர சைவர்கள் முன்னால் எங்கள்
ஈர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்

மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜ லட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேவிக்கும் விஷ்ணுதாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த கங்கராஜன் தான்

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
வீசும் காற்று வந்து விளைக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான் மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது



Credits
Writer(s): Himesh Reshammiya, Vaalee
Lyrics powered by www.musixmatch.com

Link