Poi Solla koodadhu

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி

கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்

பொய் ஒன்றை ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி

அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத் தோண்டி
பதியம் போட்டு கொண்டேன்
கண்டவுடன் எனையே தின்றதடி விழியே
என்னை விட்டுத் தனியே சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழி சுடரே நட்சத்திர பயிரே
ரெக்கை கட்டி வா நிலவே

பொய் ஒன்றை ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி

ஓ... ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணே
நீ ஒற்றை துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டேன் அழகே
நெற்றிமுடி வழியே தப்பி வந்தேன் வெளியே

அடி பொத்தி வைத்த புயலே
தத்தளிக்கும் திமிரே
வெட்கம் விட்டு வா வெளியே

நில் என்று கண்டித்தாய்
உள் சென்று தண்டித்தாய்
சொல் என்று கெஞ்சத்தான்
சொல்லாமல் வஞ்சித்தாய்

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி

கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்

பொய் ஒன்றை ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான்



Credits
Writer(s): Vidya Sagar, Arivumathi
Lyrics powered by www.musixmatch.com

Link