Namma Singari

ஆ: (வாழைப்பழம் தோலுரிச்சி பானையில ஊறவச்சி
வாணலியில் ராப்பகலா காச்சி இங்க வச்சிருக்கு
பாத்தாலே தண்ணி வரும்... எப்பா. பாக்குறவன் நாக்குலதான்
பாலாட்டும் அய்யோ தேனாட்டம் அய்யய்யய்யோ வாடைவரும் மூக்குலதான்)

ஆ: நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்ம கும்முன்னு ஏறுது கிக் எனக்கு
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்ம கும்முன்னு ஏறுது கிக் எனக்கு
நான் விட்டெறிஞ்சேன் சல்லிய
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய
நான் விட்டெறிஞ்சேன் சல்லிய
ஊத்திக்கிட்டேன் மில்லிய
குதிரை மேல ஏறி போய் வாங்க போறேன் டில்லியை
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு ஏறுது கிக் எனக்கு

ஆ: சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும்
சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும்
சங்கீதம் தேனா வந்தா கூட இங்கிதம் தானா வரும்
அட தவக்களை சத்தம் சகிக்கலை
குட்டை குளத்துலே கத்தி பழகலே
நம்மகிட்ட கத்துக்கோ வாத்தியாரா ஒத்துக்கோ
எத்தனையோ வித்தையை வச்சிருக்கேன் பாத்துக்கோ
உச்சந்தலை கீழுருக்க உள்ளங்கால் மேலிருக்க
நிக்கட்டுமா நடக்கட்டுமா... ஹோய்...

நம்ம சிங்காரி சரக்கு

ஆ: முன்னாடி இருக்குதடா நம்ம மூக்காயி இட்லி கடை
பின்னாலே ருசிக்குமடா இவ சூடான கீரவடை
இது மணக்குது என்னை மயக்குது
பசி எடுக்குது பக்கம் இழுக்குது
புத்தம் புது ஆப்பமா தொட்டு கொஞ்சம் பாப்போமா
தின்னுபுட்டு மொத்தமா துட்டு என்ன கேப்போமா
சுட்ட கருவாடிருக்கு வாத்துமுட்டை வறுத்திருக்கு
அடிக்கடி நான் கடிச்சிக்கதான்... ஹோய்ய் யா...

நம்ம சிங்காரி சரக்கு



Credits
Writer(s): Kannadhasan, M. S. Viswanathan, R K Sunder
Lyrics powered by www.musixmatch.com

Link