Thoovaanam (From "Romeo Juliet")

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக உயிர் கரைவதை
நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

குயிலென மனம் கூவும்
மயிலென தரை தாவும்
என்னோடு நீ நிற்கும் வேளையில்

புழுதியும் பளிங்காகும்
புழுக்களும் புனுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்

யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும்
நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்

காதல் வந்தால் கோபம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

இரவுகள் துணை நாடும்
கனவுகள் கடை போடும்

நீ இல்லை என்றால் நான் காகிதம்

விரல்களில் விரல் கோர்க்க
உதட்டினை உவர்ப்பாக்க
நீ வந்தால் நான் வண்ண ஓவியம்

நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை
ரீங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை

நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே
கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக
உயிர் கரைவதை நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில்



Credits
Writer(s): Imman David, Subramanian Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link